TV

6807407510_87e96e8176_b

உசிலம்பட்டி, 21.05.19:

உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார் பழுந்தடைந்ததால் நகர் பகுதிகளில் பல மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மில் திடீரென்று தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் மின்தடை ஏற்பட்டு பல மணி நேரமாகியும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரததால், உசிலம்பட்டி நகர் முழுவதும் பல மணி நேரமாக மின்சாரம் வரவில்லை. மேலும் இப்பகுதியில் இருந்துதான் உசிலம்பட்டியின் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ள பகுதிக்கு மின்விநியோகம் வழங்கப்படுகின்றது.

இதனால் தங்கள் வியாபாரம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மை விரைவில் சரிசெய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்சார ஊழியர்களின் மெத்தனப்போக்கினால் பழுதடைந்துள்ள டிரான்ஸ்பார்மை இதுவரை சரிசெய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply