TV

6807407510_87e96e8176_b

ராமநாதபுரம், 22.05.19:

ராமநாதபுரம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் நானா என்ற நாகநாதன் (32). பெயின்டராக வேலை பார்த்துவரும் இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் பெயின்டர் வேலை பார்த்து வந்த இவர் கஞ்சா வியாபாரமும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கஞ்சா விற்பனையில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக இவருக்குமு் மற்றொரு தரப்பினருக்கும், இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் இன்று பகல் 11:30 மணியளவில் ராமநாதபுரம் குட்ஷெட் தெருவில் நாகநாதன் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 மர்ம நபர்கள், நாகநாதனிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இந்த தகராறு தேலாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த 3 பேரும், நாகநாதனின் மீது நடந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நாகநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நாகநாதன் உடலை கைப்பற்றி, பிரேதபரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் டவுன் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply