TV

6807407510_87e96e8176_b

சவுதி அரேபியா, 22.05.19:

சவுதி அரேபியாவில், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரபல அறிஞர்கள் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில், கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், பெரும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்படி கடந்த மாதம் மட்டும், பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதில் 2 பேர், பொதுமக்கள் முன்னிலையில் தண்டிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது, சவுதி அரேபியாவில் பிரபல அறிஞர்களாக கருதப்படும் ஷேக் சல்மான் அல்-அவ்தாக், அவாத் அல்-குயார்னி மற்றும் அலி அல்-ஒமாரி ஆகிய 3 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள், பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவர்களது மரண தண்டனை, ரம்ஜான் பண்டிகை முடிந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில், கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 148 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமைகள் ஆணையமும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருந்தபோதும், அங்கு இத்தகைய தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருவது வழக்கமாகியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply