TV

6807407510_87e96e8176_b

கோவை, 22.05.19:

16 வயதிற்கு உட்பட்டோருகான தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஹரியானாவும்,பெண்கள பிரிவில் கேரளா அணியும் வெற்றி பெற்றது.

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான 36வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் கடந்த மே 14 தொடங்கி 21ந் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

இதில் இறுதி போட்டிக்கு பெண்கள் பிரிவில் தமிழ்நாடு மற்றும் கேரள அணிகளும், ஆண்கள் பிரிவில் ஹரியானா மற்றும் கேரளா அணிகளும் முன்னேறியது. இந்நிலையில் நேற்று முதலாவதாக நடைபெற்ற இறுதி போட்டியில் பெண்கள் ஆட்டத்தில் கேரளா அணியுடன் தமிழ்நாடு அணி மோதியது. இதில் கேரளா அணி 80 -69 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவில் கேரளா அணியை எதிர்த்து ஹரியானா அணி விளையாடியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே ஏற்பட்டது.

இறுதியில் ஹரியானா அணி 81-74 என்ற புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. ஆண்கள் பிரிவு போட்டியில் வெற்றி பெற்ற ஹரியானா அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 1.5 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த கேரளா அணிக்கு பரிசாக ரூபாய் 1 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ராஜஸ்தான் அணிக்கு பரிசாக ரூபாய் 50,000.00, பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கேரளா அணிக்கு முதல் பரிசாக ரூபாய் 1.5 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த தமிழ்நாடு அணிக்கு பரிசாக ரூபாய் 1 லட்சம், பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்றாம் இடம் பெற்ற ராஜஸ்தான் பெண்கள் அணிக்கு பரிசாக ரூபாய் 50,000, பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக ஹரியானா அணியை சேர்ந்த திரு. ஐ. சகில் மற்றும் கேரளா அணியை சேர்ந்த வீராங்கனை ஆன் மேரி ஜக்காரியா ஆகியோருக்கு சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கான பரிசாக தலா ரூபாய் 25 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு அணியை சேர்ந்த சத்யா அவர்களுக்கு பிராமிசிங் பிளேயர் விருது வழங்கப்பட்டது.இப்போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பாக விளையாடிய விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply