TV

6807407510_87e96e8176_b

கோவை, 22.05.19:

கோவை குறிச்சி குளத்தில் குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம்  அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குறிச்சி குளத்தில் தற்போது தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுவதால் குறிச்சி பிரிவு, காளவாய் பகுதியில் உள்ள சிறுவர்கள் அந்த குளத்தில் விளையாடுவதும் குளிப்பதும் வழக்கம். அதே போல இன்றும் காளவாய் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது என்பவருடைய மகன் இர்பான் தனது நண்பகளுடன் குளத்தில் குளித்துக்கொண்டிருக்கும்பொது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற சிறுவர்கள் உடனடியாக பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறைக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்களுடன் இனைந்து, நீண்டநேரமாக போராடி நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தை குறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குளிக்க சென்ற 14 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply