TV

6807407510_87e96e8176_b

பெங்களூர், 23.05.19:

கர்நாடக மாநிலம் மண்டியா மக்களவை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட மறைந்த நடிகர் அம்பரிஷின் மனைவி சுமலதா தன்னை எதிர்த்து போட்டியிட்ட கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமியின் மகனான நிகில் கவுடாவை, சுமார் 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.

2019 மக்களவை தேர்தல் முடிவடைந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியாக வருகின்றன. இதில் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா தொகுதியில் மறைந்த நடிகன் அம்பரிஷின் மனைவி சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டார். மேலும்கர்நாடக மாநிலத்தின் தொகுதி ஒதுக்கீட்டின் போது மண்டியா தொகுதியை காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முதல்வர் குமாரசாமி கட்சியான ஜே.டி.எஸ். கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த நடிகை சுமலாதாவிடம் வேறு தொகுதி ஒதுக்கி தருகிறோம் அதில் போட்டியிடுங்கள் என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காத அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார். இதனையடுத்து மண்டியா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் கவுடா களமிறக்கப்பட்டார். ஆனால் இதனை ஏற்காத உள்ளூர் காங்கிரஸார் தங்களது முழு ஆதரவையும் நடிகை சுமலதாவிற்கே மறைமுகமாக அளித்து வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குமாரசாமி, ஒருகட்டத்தில் வாய்விட்டே புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகள் தற்போது வந்துள்ள நிலையில், குமாரசாமி பயந்தது போலவே தற்போது மண்டியா தொகுதியில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே நடிகை சுமலதா முன்னிலை வகித்து வந்தார். இறுதி சுற்றின் போது நிகில் கவுடாவை விட 90,000 வாக்குகள் அதிகம் பெற்று சுமலதா அபார வெற்றிபெற்றுள்ளார். இதனால் குமாரசாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply