TV

6807407510_87e96e8176_b

சென்னை, 24.05.19:

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இந்திய அளவில் பெரும் வெற்றி பெற்ற பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. இந்நிலையில், தற்போது #TNRejectsBJP என்ற ஹஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் எப்படியாவது வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக தலைமை மிகவும் பிரபலமானவர்களையே வேட்பாளர்களாகவும் நிறுத்தியது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் எச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், தூத்துக்குடியில் பாஜ தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிட்டனர்.

மேலும் வெற்றி கட்டாயத்தில் கட்சி தலைமையின் கடும் நெருக்கடி கொடுத்ததை தொடர்ந்து வேட்பாளர்கள் தங்களுடைய தொகுதிகளில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தை மேற்கொண்டனர். வேட்பாளர்கள் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் ‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாசகத்தையே முன்மொழிந்து வந்தனர். குறிப்பாக, பிரதமர் மோடியும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்தும் தமிழகத்தில் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இந்நிலையில், நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தேசிய அளவில் பாஜக பெரும் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற போதிலும், தமிழகத்தை பொறுத்தவரை பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது பாஜ தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

ஒருபக்கம் நாடு முழுவதும் பாஜகவினர் தங்களது வெற்றியை கொண்டாடி வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக மக்கள் #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply