TV

6807407510_87e96e8176_b

கனடா, 29.05.19:

போட்டோகிராபருக்கு ‘போஸ்’ கொடுத்த கழுகின் தத்ரூபமான புகைப்படம், உலகம் முழுவதும் ‘வைரல்’ ஆகி வருகிறது.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஸ்டீவ் பைரோ. புகைப்படக் கலைஞரான இவர், இயற்கை காட்சிகள் மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில், ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்றிருந்த இவர், அங்குள்ள பறவைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்தார். இதையடுத்து, ‘புரூஸ்’ எனும் கழுகு ஒன்றை புகைப்படம் எடுக்க தயார் ஆனார்.

பொதுவாக, தங்களை யாராவது கேமரா மூலம் படம் எடுக்க முயன்றால் அந்த இடத்தில் இருந்து பறந்துவிடும். ஆனால் ‘புரூஸ்’, தன்னை புகைப்படம் எடுப்பதை அறிந்தது, நேர்கொண்ட பார்வையுடன், 2 இறக்கையும் தண்ணீரில் உரசியபடி ‘போஸ்’ கொடுப்பதுபோல அவரை நோக்கி பறந்து வந்தது. இந்தக் காட்சியை ஸ்டீவ் பைரோ தத்ரூபமாக படம் பிடித்தார். அந்த படத்தை ‘பேஸ்புக்’ மற்றும் ‘இன்ஸ்டாகிராம்’ ஆகிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

தற்போது அந்த படம் உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் ஸ்டீவ் பைரோவுக்கு பெரும் பெயரும், புகழும் கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், “இந்த புகைப்படம் மற்றவர்களைவிட எனக்கு மிகவும் தனித்துவம் வாய்ந்தது. ஆனால் இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்பதை நான் அறியவில்லை” என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply