TV

6807407510_87e96e8176_b

பாரீஸ், 31.05.19:

புகழ்பெற்ற ஈபிள் டவர் கட்டப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், பாரீஸ் நகரத்தின் அழகை கண்டுகளிக்கும் விதமாக சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ள ‘ஈபிள் டவர்’, உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் இது, உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. பிரான்ஸ் புரட்சியை நினைவுகூரும் விதமாக, 1889ம் ஆண்டு கஸ்டேவ் ஈபிள் என்பவரால் இந்த டவர் அமைக்கப்பட்டது. 324 மீட்டர் உயரம் கொண்ட இந்த டவரை கட்டி முடிக்க சுமார் 26 மாதங்கள் ஆனது. இதன் மொத்த எடை 7,300 டன்.

இந்நிலையில், ஈபிள் டவர் தற்போது தனது 130வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதையொட்டி, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஈபிள் டவரில் இருந்து சாகசப் பயணம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈபிள் டவரின் மேல் தளத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள, 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணுவ அலுவலகம் வரை கம்பி வடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கம்பி வடத்தில் பொருத்தப்பட்டுள்ள பெல்ட்டில் அமர்ந்துகொண்டு, கம்பி வழியே சறுக்கிச் சென்று, பாரீஸ் நகரின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்த வசதி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 11ம் தேதி வரை இந்த வசதி தொடரும். சுற்றுலாப் பயணிகள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று சாகச பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply