TV

6807407510_87e96e8176_b

கோவை, 31.05.19:

தமிழகத்தில் முதல் முறையாக, டி.வி.எஸ் மோட்டர் நிறுவனத்தின் புதிய ரக அபாச்சி ஆர்.ஆர் 310 பைக், ரேஸ் ட்யூன்ட் ஸிலிப்பர் கிளட்ச் என்னும் புதிய தொழில் நுட்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

உலக அளவில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் டி.வி.எஸ் நிறுவனம், தனது புதிய ரக இருசக்கர வாகனத்தை தமிழகத்தில் முதன் முறையாக கோவையில் அறிமுகபடுத்தியுள்ளது. டி.வி.எஸ் அபாச்சி ஆர்.ஆர் 310 என்று பெயிரிடுபட்டுள்ள இந்த பைக் புதிய ரேஸ் ட்யூண்ட் க்ளட்ஸ் தொழில் நுட்பத்துடன் அறிமுகப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனம் அதிக சிரமம் இல்லாமல், வெகு சுலபமாக கியரை மாற்ற உதவுவதோடு,வெகுவேகமாக பயணிக்கும் போது, சாலை ஓரங்களிலும் திருப்பங்களிலும் வேகத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலையில் வாகனத்தை கட்டுப்பாட்டுடன் ஓட்ட உதவும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

புதிய பேண்டம் வண்ணத்தில், கூர்மையான முனைகள் மற்றும் அசத்தலான கோணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக் இளைஞர்களை கவரும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பழைய அப்பாச்சி ஆர்.ஆர் 310 வாகனத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இந்த புதிய தொழில் நுட்பத்தை குறைவான கட்டணத்தில் பொருத்தி கொள்ளலாம். இந்தியாவில் கிரிகெட் வீரர் தோனி இந்த புதிய தொழில் நுட்பம் கொண்ட பைக்கின் முதல் உரிமையாளர் ஆவார்.

ஸ்பீடு கியர் பாக்ஸ்,டபுள் லிக்விட் கூல் என்ஜின்,வெர்டிகல் ஸ்பீடோ மீட்டர்,பைலெட் ட்விட் ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்களுடனும் ரேசிங் ரெட் மற்றும் பேண்டம் பிளாக் ஆகிய இரு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இதன் விலை ₹2,22,000 என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply