TV

6807407510_87e96e8176_b

நியூயார்க், 02.06.19:

நிற்கும் இடத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் வாகனத்தை, அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ‘அலக்கா-ஐ டெக்னாலஜிஸ்’ என்ற நிறுவனம், ‘ஸ்கை’ எனும் பெயரில், 5 பேர் அமரக்கூடிய பறக்கும் வாகனத்தை வடிவமைத்திருக்கிறது. இந்த வாகனம், ட்ரோன் எனும் ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பத்தையும், ஹெலிகாப்டர் நுட்பத்தையும் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. 6 சுழலும் றெக்கைகளின் உதவியுடன், நிறுத்திவைக்கப்பட்ட இடத்திலிருந்து செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் திறன்படைத்தது.

எந்த மாசையும் வெளிப்படுத்தாத, மாற்று எரிபொருட்களில் ஒன்றான ஹைட்ரஜனில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 644 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் வல்லமை படைத்த இந்த வாகனம், 454 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் உடையது. எஸ்.யூ.வி மாடல் கார் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த வாகனத்தை, டாக்ஸியாகவும் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம்.

சமீபத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply