TV

6807407510_87e96e8176_b

நாமக்கல், 04.06.19:

குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளார்.

அரசு துறைகளில் பணியாற்றும் பலர், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த மாஜிஸ்திரேட் ஒருவர், தன் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் வடிவேல் (45). இவர் நேற்று (3ம் தேதி) காலை, நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, தனது மகள் ரீமாசக்தி (13), மகன் நிஷாந்த் சக்தி (11) ஆகியோருடன் சென்றார். அங்கு, தலைமை ஆசிரியை சாந்தியை சந்தித்த அவர், தனது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கக்கோரி, அதற்கான விண்ணப்ப படிவத்தை வழங்கினார்.

இதையடுத்து, ரீமாசக்தி 8ம் வகுப்பிலும், நிஷாந்த் சக்தி 6ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். மாஜிஸ்திரேட் வடிவேல் இதற்கு முன்னர் திருச்சி மாவட்டம் துறையூரில் பணியாற்றியபோது, அவருடைய குழந்தைகளை அங்குள்ள அரசுப் பள்ளியில் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply