TV

6807407510_87e96e8176_b

பீகார், 04.06.19:

பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த ரயிலின் சக்கரம் திடீரென உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், உடனடியாக ரயிலை நிறுத்தியதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து மும்பை குர்லா டெர்மினஸ் நோக்கி கோடைகால சிறப்பு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயில், நாசிக் மாவட்டம் மன்மாட் ரயில் நிலையத்தை நெருங்கியபோது, ஒரு பெட்டியின் கீழ் பகுதியில் இருந்து பயங்கர சத்தம்கேட்டுள்ளது. ‘ஏதோ விபரீதம் நடந்து விட்டது’ என பதறிப்போன பயணிகள், அலறியடித்தபடி அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதையடுத்து பயணிகள் கீழே இறங்கி பார்த்தபோது, அந்த பெட்டியின் சக்கரம் உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இது தொடர்பாக தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்தப் பெட்டி பிரிக்கப்பட்டு, மாற்று பெட்டி கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. இதையடுத்து, சுமார் 3 மணி நேரம் தாமதமாக அந்த ரயில் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ஸ்டேஷனை நெருங்கியதால் ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் சக்கரம் உடைந்துள்ளது. சத்தம் கேட்ட உடனே ரயில் நிறுத்தப்பட்டதால், பெரும் விபத்து தவிக்கப்பட்டது” என தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply