TV

6807407510_87e96e8176_b

புதுடெல்லி, 05.06.19:

ஜல்லிக்கட்டின்போது காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், அதன் வால் முறுக்கப்படுவதாகவும் பீட்டா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கினால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும் போராட்டங்களுக்குப் பின் முறியடிக்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக, மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகள் தாக்கப்படுவதாக பீட்டா அமைப்பு மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் சார்பாக 73 பக்கத்தில் அறிக்கையொன்றும், காணொலி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில், “ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காளைகள் தாக்கப்படுகின்றன. அதன் வால் முறுக்கப்படுகிறது. மூக்கணாங்கயிறு போடுவதால் மூக்கில் ரத்தக் கசிவு ஏற்படுகிறது” என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மிருகவதை தடைச் சட்டம் (தமிழகம் திருத்தம்) 2017இன்படி ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்பட்டதற்குப் பின்னர் பொதுமக்கள் 42, காளைகள் 14, ஒரு பசு உயிரிழந்ததாகக் கூறியுள்ளது பீட்டா அமைப்பு.

இது குறித்து பீட்டாவின் இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி மணிலால் வல்லியாட் கூறுகையில், “ஒவ்வோர் ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுகளும் மனிதர்களும் தாக்கப்பட்டுப் பலியாகின்றனர். நாங்கள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்திருக்கிறது. இந்த ஆபத்தான விளையாட்டு முற்போக்கான நமது நாட்டுக்குத் தேவையற்றது” என்று தெரிவித்தார். ஜல்லிக்கட்டை உடனே தடை செய்ய வேண்டும் என்று மீண்டும் பீட்டா வலியுறுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply