TV

6807407510_87e96e8176_b

லண்டன், 05.06.19:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் சவுத்தாம்ப்டன் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் மோத உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கியது. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.

மேலும் இந்த தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் ஒன்று, இரண்டு ஆட்டங்களில் ஆடி உள்ள நிலையில், இந்திய அணி தனது முதல் போட்டியை இன்று ஆட உள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அனைத்து அணிகளும் மொத்தம் 9 லீக் ஆட்டத்தில் ஆட உள்ள நிலையில், 6 போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.

உலக தரவரிசையில் 2 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, தற்போது நல்ல பார்மில் இருக்கிறது. அனைத்து வீரர்களும் ஒருகிணைந்து செயல்படும் பட்சத்தில், உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்கலாம். ரோகித், சிகர் தவான், ராகுல், கோலி, தோனி மற்றும் ஹர்திக் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். அதேபோல குல்தீப், சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் முகம்மது ஷமி ஆகியோரின் பந்து வீச்சு மிரட்டலாக இருக்கும்.

அதே சமயம், தனது முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்து உள்ள தென் ஆப்பிரிக்கா அணி, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்த அணியின் வேகபந்துவீச்சாளர்கள் லுங்கி நிகிடி, டேல் ஸ்டெயின் காயம் காரணமாக விலகியது தென் ஆப்பிரிக்கா அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. அதிலும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து டேல் ஸ்டெயின் விலகி இருப்பது அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

இன்றைய ஆட்டத்தில் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க தென் ஆப்பிரிக்காவும், வெற்றியுடன் தொடங்க இந்தியாவும் ஆட இருப்பதால், ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply