TV

6807407510_87e96e8176_b

லண்டன், 07.06.19:

கிங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் இருந்த முத்திரையை நீக்க வேண்டும் ஐசிசி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.

உலக கோப்பை தொடரில் கடந்த 5-ம் தேதி சவுத்தாம்டன் நகரில் நடைபெற்ற இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கையில் அணிந்திருந்த கிளவுஸில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் என்ற முத்திரை இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த முத்திரையை கேமராவில் ஜூம் செய்யப்பட்டு தோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது.

இந்தக் காட்சியைப் பார்த்த தோனியின் ரசிகர்கள், தோனிக்கும் இருக்கும் நாட்டுப்பற்றைப் புகழ்ந்து, சமூக ஊடகங்களில் அவரைப் பாராட்டினர். தோனி கையுறையில் பலிதான் முத்திரை படம் நேற்று சமூக ஊடகங்களிலும் வைரலானது. ஆனால், எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடரில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதற்கு ஐசிசி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி பொதுமேலாளர் கிளாரி பர்லாங் விடுத்த அறிக்கையில்,

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் இந்திய ராணுவத்தின் முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அதை நீக்கக் கோரி உடனடியாக பிசிசிஐக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுபோன்ற ஒரு நாட்டின் ராணுவத்தின் முத்திரையை அணிந்து விளையாடுவது ஐசிசி விதிகளுக்கு முரணானது. கிளவுஸில் , விளம்பரதாரர் முத்திரை மட்டுமே அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக செய்த குற்றம் என்பதால், நாங்கள் அறிவுறுத்தலோடு விட்டுவிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply