TV

6807407510_87e96e8176_b

பிரிஸ்டல், 07.06.19:

2019 உலகபோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், உலககோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை பாகிஸ்தான் அணியை வென்றிதில்லை என்ற வரலாறை மாற்றி சரித்திரம் படைக்குமா என கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

12 வது உலககோப்பை தொடர் கடந்த மே 30 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 பொட்டிகள் முடிந்துள்ள நிலையில், இன்று தொடங்கும் 11வது போட்டியில் ஆசிய நாடுகளான பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பிரிஸ்டல் நகரில் மோதவுள்ளது. இதுவரை இந்த 2 அணிகளுக்கும் 2 போட்டிகளில் ஆடி தலா ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 7 மற்றும் 8 வது இடத்தில் உள்ளன.

பாகிஸ்தான் அணி தரப்பில் இமாம், பாபர், ஃபகார் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சை பொறுத்தவரை வகாப் ரியாஸ் விக்கெட்கள் எடுத்தாலும் அதிக ரன்களை அள்ளித் தருகிறார். இமத் வாசிம், முகமது ஆமிர் ஆகியோரிடம் விக்கெட் எடுக்கும் வேகம் குறைவாக இருக்கிறது.

இலங்கை அணியிலும் கேப்டன் கருணரத்னே மட்டும் சிறந்த ஆட்டத்தை வெனிப்படுத்தி வருகிறார். மேலும் குசால் பெரேரா, திசாரா பெரேரா ஆகியோர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பந்துவீச்சில் மலிங்கா, நுவன் பிரதீப் இன்றைய போட்டியில் அணியின் வெற்றிக்கு கை கொடுக்கலாம். இரு அணிகளும் இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றி காரணமாக பெரிய மாற்றம் இருக்காது. ஆனால் 3வது வெற்றியை பெற இரு அணிகளும் கடுமையாக பொராடும்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த 2 அணிகளும் இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், பாகிஸ்தான் 90 போட்டிகளிலும், இலங்கை 58 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் ஒரு போட்டி சமமாகவும், 4 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல கடைசியாக நடந்த 5 ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் தான் வெற்றி வாகை சூடியுள்ளது. ஆக ஒருநாள் போட்டிகளில் எப்போதும் பாகிஸ்தானின் கையே ஓங்கியிருப்பது வழக்கமாக இருக்கிறது

மேலும் உலக கோப்பை போட்டிகளில் இந்த 2 அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளன. அவற்றில் ஒன்றில் கூட இலங்கை வென்றதில்லை என்பது வரலாறு. இன்று நடைபெறும் போட்டி மூலம் அந்த வரலாற்றை இலங்கை மாற்றுமா இல்லை பாகிஸ்தான் வெற்றி தொடருமா என்பது பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply