TV

6807407510_87e96e8176_b

சென்னை, 08.06.19:

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்தின் மீது இருந்து குதித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தேனாம்பேட்டை, எல்லையம்மன் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவரது மகன் ஸ்ரீவந்த் கே. அருண் (17), சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் இவர், நேற்று பள்ளி முடிந்து மாலை 3:15 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்காக மெட்ரோ ரயில் மூலம் கோயம்பேடு வந்து இறங்கினார். பின்னர் அருகிலிருந்த படிக்கட்டு வழியாக மேலே ஏறிய ஸ்ரீவந்த் கே.அருண் திடீரென கீழே குதித்தார்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

இதனை பார்த்த அங்கிருந்த மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு சத்தம் போட்டனர். இந்நிலையில் கீழே விழுந்து அருண் ரத்தக் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோயம்பேடு போலீசார் உயிரிழந்த அருணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அருண் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணம் உண்டா என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவன் மெட்ரோ ரயில் நிலைய மாடியில் இருந்து கீழே குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply