TV

6807407510_87e96e8176_b

லண்டன், 08.06.19:

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ள நிலையில், மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலபரிட்சை நடத்துகின்றன.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30 தேதி இங்கிலாந்தில் தொடங்கிய நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. கார்டிஃப் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்குத் தொடங்குகிறது.

நடப்பு தொடரின் முதல் போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை சந்தித்த இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தற்போது புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.  பேட்டிங், பந்துவீச்சில் இங்கிலாந்து அணி வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட், அடில் ரஷித் பந்துவீச்சில் மிரட்டுகிறார்.

இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பங்களாதேஷ் அணி, இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் போராடி தோற்றது. அந்த அணியில், பேட்டிங்கில் தமிம் இக்பால், சவுமியா சர்கார், ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிம் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். பந்துவீச்சில் முஸ்தபிஷூர் ரகுமான், சைபுதீன், மெஹிடி ஹசன், மோர்டாசா ஆகியோர் மிரட்டுகின்றனர். இருந்தாலும் இங்கிலாந்து சொந்த மண்ணில் ஆடுவதால், பங்களாதேஷ் அணிக்கு இன்றைய போட்டி கடும் சவாலாக இருக்கும். மேலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால் 2வது வெற்றியை பெற இரு அணிகளும் கடுமையாக போராடும்.

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து:

இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. டான்ட்டன் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது. நடப்பு தொடரில் விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

விளையாடிய இரு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்துள்ளது. அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான முகமது ஷாசத் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கும். இருந்தாலும் சிறப்பான ஸ்பின்னர்களை கொண்ட அந்த அணி, நியூசிலாந்து அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply