TV

6807407510_87e96e8176_b

சவுதாம்டன், 10.06.19:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணியுடன், தென் ஆப்பிரிக்க அணி மோதவுள்ளது. இங்கிலாந்தின் சவுத்தாம்டனில்  நடைபெறவுள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி பிறபகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

கடந்த மே 30 ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய உலககோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில், ஏற்கனவே தொடர்ந்த 3 தோல்விகளை பெற்று மோசமான நிலையில் இருக்கும் தென் ஆப்பிரிக்கா அணி மேற்கு இந்தியதீவுகள் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள தென்ஆப்ரிக்க அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசிம் அம்லா, டூபிளெசிஸ், மார்கிரம், குயின்டன் டி காக், மில்லர், மோரிஸ், வேண்டர் டசன் ஆகியோர் எதிர்பார்த்த பங்களிப்பை கொடுக்காத நிலையில், இன்றைய லீக் ஆட்டத்தில் இவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடக்க வீரர் கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில், அதைத் தொடர்ந்து வரும் வீரர்களும் அபாரமாக விளையாடு வார்கள் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்து வீச்சாளர்கள் ரபாடா, மோரிஸ், பெலுக்வாயோ, டசன், சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தகிர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

அதே நேரத்தில் பாகிஸ் தானுக்கு எதிரான ஆட்டத்தில் அபாரமாக வெற்றியைப் பெற்ற மேற்கு இந்தியத்தீவுகள் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்களில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது. எனவே இந்த போட்டியில் அந்த அணி வெற்றி பெற முழு முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. கிறிஸ் கெயில், லெவிஸ், ஹோல்டர், ஹோப், ஹெட்மயர், ரஸ்ஸல் ஆகியோரிடமிருந்து சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங்கில் தாமஸ், ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், ஹோல்டர், காப்ரியேல் ஆகியோர் மிரட்டி வருகின்றனர். எனவே இந்த ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply