TV

6807407510_87e96e8176_b

வேலூர், 11.06.19:

மகள் காதல் திருமணம் செய்ததால் அவர் இறந்து விட்டதாக அவரது தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள குப்பராஜபாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (48). இவரது மகள் அர்ச்சனா (21) இவர் அப்பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி (25) என்ற இளைஞரை சில வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். மேலும் இவர்கள் இருவரும் வேறு வேறு சமூகத்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களின் கதலுக்கு அர்ச்சனாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

இந்நிலையில் அர்ச்சனாவின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்ததால், இதனை விரும்பாத அர்ச்சனா தன் காதலன் சுப்பிரமணியை திருமணம் செய்ய முடிவெடுத்து, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி ஆம்பூரில் உள்ள கோவிலில் சுப்பிரமணியை திருமணம் செய்துகொண்டனர்.

ஏற்கனவே மகளது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த தந்தை சரவணன், இது பற்றி கேள்விபட்டு கோபம் கொண்டார். பின்னர் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தன் மகள் இறந்துவிட்டதாக ஊர் முழுக்க கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளார். இதுகுறித்து உறவினர்கள் மற்றும் ஊரார் சரவணனனிடம் கேட்டதற்கு சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதால் இவ்வாறு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் உறவினர்கள் மற்றும் ஊரார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply