TV

6807407510_87e96e8176_b

லண்டன், 11.06.19:

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷீகர் தவன் விலகியுள்ளது இந்திய ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவன். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடாத இவர், உலக கோப்பை தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் கூட சிறப்பாக ஆடவில்லை. ஆனால் கடந்த 30 தேதி இங்கிலாந்தில் தொடங்கி நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் நிரூபித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில்  அபார ஆட்டத்தை வெனிப்படுத்திய தவன் 117 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டியில் வருகின்ற 13 ஆம் தேதி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இதற்க்கான வலைப்பயிற்சியில் இந்திய அணி ஈடுபட்டு கொண்டிருந்தபோது, இந்திய அணி நட்சத்திர வீரர் தவனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. காயம் குறித்து பரிசோதித்த இந்திய அணி மருத்துவ குழு 3 வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷீகர் தவன் விலகியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply