TV

6807407510_87e96e8176_b

கொழும்பு, 11.06.19:

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல அஞ்சிய நிலையில், ஜெர்மன் நாட்டு சொகுசு கப்பல் ஒன்று 900 பயணிகளுடன் இலங்கை வந்து சென்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில், தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், குடியிருப்பு வளாகம் என மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ‘இலங்கைக்கு சென்றிருக்கும் தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டும். மேலும் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பிருப்பதால், இலங்கைக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என பல்வேறு நாடுகளும் எச்சரிக்கை விடுத்தது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

இதனால், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்ததுடன், இலங்கையில் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 5 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை, பலத்த நஷ்டத்தை சந்தித்தது. இந்நிலையில், உலகின் மிகப்பெரிய கப்பலான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.ஐரோப்பா-2 எனும் அதிநவீன ஆடம்பர சொகுசுக் கப்பல், சுமார் 900 சுற்றுலாப் பயணிகளுடன், கடந்த 5ம் தேதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு, இலங்கை உல்லாசப் பயண ஊக்குவிப்பு சபையினரால் வரவேற்பு வழங்கப்பட்டது.

அப்போது பேசிய இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, “அழகிய இலங்கை தீவிற்கு வருகை தர தீர்மானித்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் எமது உளமார்ந்த பாராட்டுகள். உங்கள் வருகை, உல்லாசப் பயணத்திற்கு பாதுகாப்பானதும் ஏற்புடையதுமானது இலங்கை என்பதற்கு சான்று பகர்கின்றது” என்றார்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

துறைமுகத்தில் கப்பல் நின்ற நாட்களில், சுற்றுலாப் பயணிகள் கொக்கல ஏரி, கலபொட தேயிலை நிறுவனம், அக்குரெஸ்ஸ பந்த தேசிய பூங்கா, கதிர்காமம், எல்ல, சீகிரியா மற்றும் கண்டி உட்பட கொழும்பின் முக்கியமான சுற்றுலாத்தலங்களை கண்டுகளித்தனர். இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு பின்னர் வருகை தந்த முதலாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொகுசுக் கப்பல் என்ற வகையில், இந்தக் கப்பலின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்த சொகுசுக் கப்பலுக்கு இலங்கையைச் சேர்ந்த ஏட்கன் ஸ்பென்ஸ் எனும் தனியார் நிறுவனம் உபசரிப்பு முகவராக செயல்பட்டது. எம்.எஸ்.ஐரோப்பா-2 கப்பல், கடந்த 8ம் தேதி கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச்சென்றது. இலங்கை சுற்றுலாத் துறையின் வருமானம் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரத்து 438 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply