TV

6807407510_87e96e8176_b

திருச்சி 11. 06.19:

திருச்சி மாவட்டம் உறையூர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும், இலக்கியா (13) என்ற மகளும், கவுதம் (9) என்ற மகனும் உள்ளனர். மேலும் ராம்குமார் பெயிண்டராக வேலை பார்த்துவரும் நிலையில், இவரது மகள் இலக்கியா அதே பகுதியில் உள்ள மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்ற இலக்கியா பள்ளி வளாகத்தில், மாடி படியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த மாணவிகள் உடணடியாக ஆசிரியர்களிடம் கூறியதை தொடர்ந்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவி இலக்கியாவை மீட்டு, தனியார் மருத்துவமனை சேர்த்ததை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக  திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து வழக்குபதிவு செய்த உறையூர் காவல் நிலைய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றாகினர் . இதுகுறித்து பள்ளியில் பயிலும் சக மாணவிகள் கூறுகையில், விளையாடும்போது விழுந்த மாணவியை ஆசிரியர் உடனடியாக சிகிச்சைக்கு கொண்டுசெல்லாமல் காலம் தாழ்த்தி கொண்டு சென்றனர் என நேரில் பார்த்த மாணவிகள் கூறுகின்றனர்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

மாணவி இந்த நிலைமைக்கு பள்ளியின் நிர்வாகமும் மாணவியை உடனடியாக சிகிச்சைக்கு கொண்டுசெல்லாத ஆசிரியை தான் காரணம் எனவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply