TV

6807407510_87e96e8176_b

ராமநாதபுரம், 11.06.19

குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கே சாதகமற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாணவர்கள் சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது கோடாங்கிபட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தார்ச் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை, குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கே பயனற்ற நிலையில் உள்ளது. இதனால், வெளியூர் சென்று படிக்கும் மாணவ – மாணவியர் மற்றும் பணிகளுக்குச் செல்வோர் கடுமையாக சிரமப்படுகின்றனர்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

மேலும் இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால், இந்த சாலையின் அவலநிலையை அதிகாரிகளுக்கு உணர்த்தும் விதமாக, மாணவர்கள் சிலர் இந்த சாலையில் படுத்து, உருண்டு புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதயில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply