TV

6807407510_87e96e8176_b

பிரிஸ்டல், 11.06.19:

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இலங்கை, வங்கதேச அணிகள் மோதவுள்ளன. பிரிஸ்டல் நகரில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

2019 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று நடைபெறும் 16வது லீக் போட்டியில் ஆசிய அணிகளான இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளன. இதுவரை இலங்கை அணி தான் ஆடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இலங்கை அணி தற்போது 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் இலங்கைக்கு மிக முக்கியமான போட்டியாக அமைந்துள்ளது.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்

இலங்கை அணியில் கேப்டன் திமுத் கருணாரத்னே, மாத்யூஸ், குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, திசரா பெரேரா, திரிமன்னே ஆகியோர் பேட்டிங்கிலும், மலிங்கா, இசுரு உதானா, ஜீவன் மெண்டிஸ், சுரங்கா லக்மல், தனஞ்செயா டி சில்வா உள்ளிட்டோர் பவுலிங்கிலும் பலம் சேர்க்கின்றனர். மேலும் இலங்கை அணியின் முக்கிய வீரரான நுவான் பிரதீப் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இடம்பெறமாட்டார் என்பது இலங்கைக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அதே நேரத்தில் வங்கதேச அணி தான் பங்கேற்ற 3 போட்டிகளில் 2-ல் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகள் பெற்றுள்ளது. வங்கதேச அணியில் பேட்டிங்கில் சவும்யா சர்க்கார், தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன், மஷ்ராபே மோர்டாசா, லிட்டன் தாஸ் ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். பவுலிங்கில் ஷகிப் அல் ஹசன், முஷ்டாபிசுர் ரஹ்மான், மெஹதி ஹசன், முகமது சைபுதீன், மஷ்ராபே மோர்டா, மோசடெக் ஹொசைன் ஆகியோர் எதிரணியை அச்சுறுத்துவர்.

உலககோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெல்வது யார்? உங்கள் கருத்தை பதிவு செய்ய கிளிக் செய்யவும்



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply