TV

6807407510_87e96e8176_b

சென்னை, 13.06.19:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவியர்களுக்கு, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாடப்புத்தகம், சைக்கிள், மடிக்கணினி போன்றவை இலசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகளுக்கு, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து

இந்த அடையாள அட்டையில், மாணவரின் பெயர், தந்தை பெயர், யூனிக் அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாற்றுச் சான்றிதழில் உள்ள முக்கிய தகவல்கள், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது. இது தவிர ‘‘கியூ-ஆர் கோடு’’ என்று சொல்லக்கூடிய நவீன தொழில் நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் வெப்சைட்டிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய தகவல்களை பெற முடியும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் சுமார் 70 லட்சம் மாணவ – மாணவிகளுக்கு, நாளை மறுநாள் முதல் பள்ளிக்கல்வி துறை சார்பில் இந்த ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply