TV

6807407510_87e96e8176_b

பெரம்பலூர், 13.06.19:

பெரம்பலூர் அருகே டிக் டாக் செயலி மோகத்திற்கு அடிமையான பெண் ஒருவர் விஷம் குடித்து தான் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியை டிக் டாக் வலைதளத்தில் வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சீராநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவருக்கு திருமணமாகி அனிதா ( 24) என்ற மனைவியும், மோனிகா (5) அனிரூத் (3) என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மேலும் பழனிவேல் சிங்கபூரில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது மனைவி அனிதா தன் குழந்தைகளுடன் சீராநத்தம் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போன் பணன்படுத்தி வந்த அணிதா, டிக் டாக் செயலி அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இந்த செயலில் அதிக மோகம் கொண்ட அவர் பாடல் பாடுவது , நடனமாடுவது என 200-க்கும் மேற்பட்ட பதிவுகளை வெளியிட்டு வந்துள்ளார். இதனிடையே டிக் டாக் செயலியில் மூழ்கிய அணிதா குழந்தைகளை சரிவர கவனிப்பதில்லை என வெளிநாட்டில் உள்ள அவரது கணவருக்கு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல், தனது மனைவி அனிதாவை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து கடந்த 3 நட்களுக்கு முன்பு (10 ம் தேதி) விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மயங்கிய நிலையில் இருந்தள்ளார். இதனைப் பார்த்த அவரது மகள் மோனிகா தனது பாட்டியிடம் கூறி உள்ளார். இதைத் தொடர்ந்து அனிதாவை மீட்ட உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைகொண்டு சென்றனர்.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ணட வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அனிதா நேற்று  உயிரிழந்தார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குன்னம் காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனிதா தான் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடிக்கும் வீடியோ டிக் டாக்கில் பதிவேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply