TV

6807407510_87e96e8176_b

நாட்டிகாம், 13.06.19:

உலகக்கோப்பை கிரிக்கெட் 18 வது லீக் போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து

2019 உலககோப்பை தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டைத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்த தொடரின் 18 வது லீக் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. நாட்டிங்காம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்பனையாகி முடிந்துவிட்டது.

இந்திய அணியை பொறுத்தவரை தான் சந்தித்த 2 போட்டிகளிலும் பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்தியா அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் தவான் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியிருந்தாலும், மற்றொரு தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தை தருவார் என்றும், அவருக்கு கைகொடுக்கும் வகையில் புதியதாக களமிறங்கும் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விராத் கோஹ்லி, கே.எல்.ராகுல், தோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர்கள் சிறப்பான ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு பலமாக கருதப்படுகிறது.

பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், குல்தீப் யாதவ், கேதார் ஜாதவ் ஆகியோர் சுழல்பந்து வீச்சிலும் கலக்கி வருவதால் இன்றைய போட்டியிலும் அவர்களின் திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் இந்திய அணி 3 வது பெற்றியை பெறலாம். மேலும் இன்றைய போட்டியில் இந்திய அணி நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா – நியுசிலாந்து போட்டி குறித்து உங்களது கருத்து

நியூசிலாந்து அணி தான் சந்தித்த 3 போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியில் குப்தில், முரே, கேப்டன் வில்லியம்சன், ராஸ்டெய்லர் என பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். பந்துவீச்சில் போல்ட், பெர்கூசன், ஹென்றி, நீஷம் ஆகியோர் இன்றும் அதிரடியை காட்டும் பட்சத்தில் இந்திய அணிக்கு இந்த போட்டி சவாலாக இருக்குமு் என எதிர்பார்க்கலாம்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply