TV

6807407510_87e96e8176_b

திருப்பூர், 16.06.19:

பல்லடம் வீட்டில் குடிநீர் தொட்டியில் நாகபாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் குடிநீர் தேவைக்காக தனது வீட்டின் முன்பு பத்தடி ஆழமுள்ள குடிநீர் தொட்டி என்றை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தொட்டியில் நீரின் அளவை பார்பதற்காக திறந்த ராஜேந்திரன் உள்ளே பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவஇடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்றிருந்த பார்த்திபன் என்பவரது உதவியுடன் பாம்பை உயிருடன் மீட்டனர். மேலும் குடிநீர் தொட்டியில் இருந்த பாம்பு கோதுமை நாகம் எனும் அரியவகை நாக பாம்பு என்பது தெரிய வந்தது. மூனறை அடி நீளம் இருந்த இந்த பாம்பை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர் அதனை பத்திரமாக வனப்பகுதியில் விட்டனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply