TV

6807407510_87e96e8176_b

கோவை, 17.06.19:

தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் தீரவும், மாநிலத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கு நிவர்த்தி வேண்டி மகா பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் மகா பிரபஞ்ச யாகம் கோவையில் நடைபெற்றது

தமிழகத்தில் தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை வேண்டி பல்வேறு இடங்களில் யாகம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதன் முறையாக அனைத்து ஜோதிட பிரபஞ்ச குழுவினர் சார்பாக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கோவையில் இக்குழுவினர் சார்பாக ராமர் கோவில் அருகில் உள்ள அசோகா பிரேமா மண்டபத்தில் மகா பிரபஞ்ச யாகம் நடைபெற்றது.

இதில் மாநிலத்தின் தொழில் மேன்மையடையவும், திருமண தடை நீக்க, குழந்தை பாக்கியம் பெற ராகு கேது தோஷங்கள் நீங்க என பொதுமக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் மகாயாகம் நடைபெற்றது. இது குறித்து யாகத்தை ஒருங்கிணைத்த ஜோதிட பிரபஞ்ச குழுவை சேர்ந்த ஜோதிடர்கள், தனசேகரன், சந்திரன், விஜயலட்சுமி, மணிமேகலை, ஆகியோர் கூறுகையில், மகா பிரபஞ்ச சக்தியை ஈர்ப்பதற்காக இந்த குறிப்பிட்ட நாளில் யாகம் செய்வதாகவும், இது போன்று தமிழகம் முழுவதும் இந்த யாகங்கள் நடத்த உள்ளதாகவும் குறிப்பாக அடுத்த கட்டமாக மதுரையில் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனால் தண்ணீர் பஞ்சம் தீரவும் விவசாயம் செழித்து பொதுமக்கள் அமைதியாக வாழ இது போன்று யாகங்கள் நடத்தபடுவதாக தெரிவித்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply