TV

6807407510_87e96e8176_b

ஜெய்ப்பூர், 21.06.19:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் வாழும் மக்கள் யோகா செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக, ஆண்டில் ஒருநாளை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபையில் வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஐ.நா. சபை, ‘ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும்’ என்று அறிவித்தது. அதன்படி, 2015ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஜூன் மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சர்வதேச யோகாதினம் இன்று (21ம் தேதி) கொண்டாடப்பட உள்ள நிலையில், ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தில் இந்திய ராணுவ வீரர்கள் நேற்று (20ம் தேதி) மாலை யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இதில் ராஜஸ்தான் பகுதி எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த 50க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply