TV

6807407510_87e96e8176_b

சென்னை, 21.06.19:

இரண்டாவது முறையாக பிரதமரான மோடிக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆறாம் வகுப்பு மாணவனுக்கு, மோடி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை பெரம்பூர் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர். இவர் மகன் பிரனவ் (10). இவர், கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பிரதமரானார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, மோடிக்கு பிரணவ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதத்துக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘பிரணவ் ராஜ்குமார், நீங்கள் அனுப்பிய வாழ்த்துக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2022ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமாக வீடு இருக்க வேண்டும். விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக்க வேண்டும். இந்தியாவை உலகிலேயே உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக மாற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். முற்போக்கான வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் வாயிலாக வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply