TV

6807407510_87e96e8176_b

கேரளா, 22.06.19:

கேரளாவில் இருந்து ஐந்து மாதங்களுக்கு முன்னர் புறப்பட்ட கப்பல் மாயமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலில் இருந்த 243 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.

கேரள மாநிலம் எர்ணாகுளம் துறைமுகத்தில் இருந்து ‘தேவமாதா’ எனும் கப்பல் ஒன்று கடந்த ஜனவரி மாதம் பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றது. இந்தக் கப்பலில், 243 பேர் இருந்தனர்.

கப்பல் புறப்பட்டு ஐந்து மாதத்துக்கு மேலாகியும், சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று சேரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கப்பலில் இருந்து எந்த தகவலும் இல்லை. கப்பல் கேப்டன், ஊழியர்கள், அதில் பயணித்தவர்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

‘எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்ட ‘தேவமாதா’ கப்பலில் இருந்து எந்த தகவலும் வரவில்லை. மேலும், கப்பலில் இருந்த கேப்டன், ஊழியர்கள், பயணிகள் ஆகியோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை’ என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், ”கப்பல் மாயமானது குறித்து பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். ஆனால், எந்த நாடுகளிடமிருந்தும் இதுவரை தகவல் வரவில்லை” என்றார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply