TV

6807407510_87e96e8176_b

பழனி, 23.06.19:

பழனி அருகே அமரபூண்டி அருள்மிகு வீரக்குமார் வீரமாட்சியம்மன் திருக்கோவில் வருடாபிஷேக விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது அமரபூண்டி கிராமம். இந்த கிராமத்தில் பிரசிதிபெற்ற ஆயிரவைசியர் மருதாந்த மகரிஷி கோத்திரத்தாரின் அருள்மிகு வீரக்குமார் வீராமாட்சியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வருடாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஏழாம் ஆண்டு வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

அதிகாலையிலேயே தொடங்கிய இவ்விழாவில் புனிதத்தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு கணபதி பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்யம், கலசபூஜை, அக்னி கார்யம், திரவியாஹூதி, பூர்ணாஹூதி ஆகியவை நடைபெற்றதை தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply