TV

6807407510_87e96e8176_b

கோவை, 24.06.19:

கோவையில் ஸ்மார்ட் போன் மற்றும் ஐ போன்கள் சர்வீஸ் செய்வதெற்கென மொப்ஜி எனும் பிரத்யேக சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது தொழில் துறையினர் மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினர்களிடம் தவிர்க்க முடியாத சாதனமாக ஸ்மார்ட் போன்கள் இருந்து வருகிறது. மொபைல் விற்பனை நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், போன்களை பழுது பார்க்கும் சேவைகள் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் கோவையில் கடந்த 20 வருடங்களாக 4 கிளைகளை கொண்டு மொபைல் போன்கள் சர்வீஸ் மட்டும் பிரத்யேகமாக செய்து வரும் கோவை மொபைல்ஸ் சர்வீஸ் சென்டரின் 5 வது கிளை கோவை ஆர்எஸ்.புரம் பகுதியில் துவக்கப்பட்டது.

கலீப், குதரத் மற்றும் ரஹ்மத் என மூன்று சகோதரர்கள் இணைந்து நடத்தும் இந்த புதிய கிளையை நக்கலீட்டிஸ் அருண், ஸ்ரீஜா, சஷ்டி, சசி ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் மொப்ஜி எனும் புதிய சேவை துவங்கப்பட்டது. ஸ்மார்ட் மற்றும் ஐபோன்கள் பழுதானால் இந்த சேவையை தொடர்பு கொள்வதன் மூலம் வீட்டிற்கே வந்து போனை பெற்று சென்று பழுது பார்த்து அதனை சர்வீஸ் செய்து அதற்கு கியாரண்டியும் அளிக்கப்படும் என கோவை மொபைல்ஸ் தி சர்வீஸ் சென்டர் உரிமையாளர் கலீஃப் தெரிவித்துள்ளார்.

மொபைல் போன் பழுது பார்க்கும் துறையில் இது போன்று ஸ்மார்ட் போன்கள் பழுது பார்ப்பதெற்கென அறிமுகப்படுத்தப்பட்ட மொப்ஜி எனும் பிரத்யேக சேவை கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply