TV

6807407510_87e96e8176_b

கோவை, 24.06.19:

புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியானதை தொடர்ந்து சிவாஜி ரசிகர்கள் மேள தாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கடந்த 1972ம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்த திரைப்படம் வசந்த மாளிகை. 46 வருடங்களுக்கு பிறகு தற்பொது இந்த படம் டிஜிட்டல் முறையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்ட வசந்த மாளிகை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் கோவை இரயில் நிலையம் அருகில் உள்ள சாந்தி திரையரங்கில் வசந்த மாளிகை திரைப்படம் வெளியாகியுள்ளது. இளைய தலைமுறை ரசிகர்களை மிஞ்சும் வகையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் அவருக்கு திரையரங்கம் முன்பாக கட்அவுட்டுகள் அமைத்து மேள தாளங்கள் முழங்க பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். மேலும் 101 தேங்காயகள் உடைத்து அனைவருக்கும் இனிப்புகழ் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கோவை மாவட்ட சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் சிவாஜி சேகர் உட்பட ரசிகர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தை இன்றளவும் ரசிகர்கள் கொண்டாடுவதை அப்பகுதியில் செல்வோர் வியந்த வண்ணம் சென்றனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply