TV

6807407510_87e96e8176_b

காஞ்சிபுரம், 04.07.19:

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் அருகே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வரும் நிலையில், இந்த விழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், பெருகி வரும் மக்கள் கூட்டத்தால் கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்னதாகவே ஷேர் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும் என போலீசார் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் குமார் என்பவர், இது தொடர்பாக போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறிய குமார், பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனிடையே, கோவிலில் புகைப்படம் எடுத்த ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ஆகாஷ் (22) என்ற வாலிபர் மூலவர் வரதராஜ பெருமாள் சன்னிதிக்கு முன்னால் நின்று செல்பி எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது இதனைப்பார்த்த பெண் போலீசார் ஒருவர் அந்த வாலிபரை தாக்கியதாகக் கூறப்படும் நிலையில், படியில் விழுந்து உருண்ட அந்த  இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகச் கூறப்படுகிறது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply