TV

6807407510_87e96e8176_b

கோவை, 04.07.19:

சிறுசேமிப்பு போல் கிடைக்கும் மழைநீரை சேமித்து வைத்தால் மட்டுமே தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீள முடியும் என கோவையில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.

கோவை சூலூர் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். கல்லூரி வளாகத்தினுள் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஏராளமான மாணவர்கள் மாணவிகள் மற்றும் பள்ளியைச் சார்ந்த தாளாளர் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

அப்போது மேடையில் பேசிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறியதாவது:

பொறியாளர் மாணவர்கள் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறார்கள். ஒரு ராக்கெட் பறக்க விடுவதற்கு முன்பு கவுண்டவுன் எண்கள் ஆரம்பிப்பது போல் ஒவ்வொரு மாணவரது வாழ்க்கையிலும் தான் ஒரு லட்சியத்தை கையில் எடுத்துக்கொண்டு அந்த கவுண்டர் இன்று முதல் ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டு படிப்பை துவங்க வேண்டும். அப்போதுதான் நம்மால் சாதிக்க முடியும் என கூறினார்.

தொடாந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டில் படைப்புகள் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த அளவிற்கு பொறியியல் மாணவர்களும் தேவைப்படுகிறார்கள்.  தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாடு நீங்க வரும் மழைநீரை தாங்கள் எவ்வாறு சிறுசேமிப்பு செய்து வருகிறார்களோ அது போன்று மழை நீரையும் ஒவ்வொரு வீடுகளிலும் சிறுக சிறுக சேமித்து வந்தால் நிலத்தடி நீர் பெருகி தண்ணீர் தட்டுப்பாடு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply