TV

6807407510_87e96e8176_b

லண்டன், 05.07.19:

2019 உலககோப்பை தொடரில் பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹாசன் 600 ரன்களை கடந்த முதல் வீரராக என்ற சாதனையை எட்டியுள்ளார்.

லண்டன் லாட்ஸ் மைதானத்தில் அண்று தொடங்கிய பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹாக் 100ரன்களும், பாபர் அசாம் 96 ரன்களும் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் முஸ்பிகூர் ரஹ்மான்5 விக்கெட்டுகளும், சர்புதீன் 3 விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து, 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணியில் தமிம் இக்பால் 8, சவுமியா சர்கார் 22, முஸ்பிகூர் ரஹிம் 16 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய மறுபுறம் ஷகிப் அல் ஹாசன் மட்டும் தனி ஆளாக போராடினார். அவருக்கு ஒத்துறைப்பு கொடுத்த லிட்டன் தாஸ் 32 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஷகிப் அல்ஹசன் 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன்66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 44.1 ஓவர்களில் 288 ரன்களுக்கு ஆட்டமிழந்து 94 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் 5 வது அரைசதத்தை பூர்த்தி செய்த ஷகிப் அல் ஹாசன் முதல் வீரராக 600 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்தத் தொடரில் மொத்தம் 606 ரன்கள் எடுத்துள்ள அவர், உலககோப்பை தொடரில் 600 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் ஆவார்.

உலகக் கோப்பை தொடர்களில் ஒட்டுமொத்தமாக இதுவரை இரண்டு பேர்தான் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். அதில் சச்சின் 673 ரன்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், 659ரன்களுடன் ஆஸ்திரேலிய அணியின் மேத்யூ ஹைடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

8 இன்னிங்சில் மட்டுமே விளையாடியுள்ள ஷகிப 600 ரன்களுக்கு மேல் குவித்ததோடு மட்டுமல்லாமல் 11 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியாவின் ரோகித் சர்மா 544, ஆஸ்திரேலியாவின் வார்னர் 516, பின்ச் 504, இங்கிலாந்தின் ரூட் 500 ரன்கள் குவித்துள்ளனர். அதனால், இந்த உலகக் கோப்பை தொடரில் நிறைய பேர் 600ரன்களுக்கு மேல் குவிக்க வாய்ப்புள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply