TV

6807407510_87e96e8176_b

லண்டன், 05.07.19:

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 43 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது.

2019 உலககோப்ப கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளையுடன் லீக் ஆட்டங்கள் முடிவடையவுள்ளன. இந்நிலையில் இன்று நடைபெற்ற 43 வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இமாலய வெற்றி பெற்றால் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய பக்கர் சமான்  13 ரன்கள் எடுத்து விரைவில் ஆட்டமிழந்தாலும், அதன்பிறகு களமிறங்கிய பாபர் அசாம் மற்றொரு தொடக்க வீரர் இமான் உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டார். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்த நிலையில், அணியின் ஸ்கோர் 180 ரன்களாக இருந்தபோது பாபர் அசாம் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து தனது நிலையான ஆட்டத்தின் மூலம் சதமடித்த இமான் 100 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய வீரர்களில் வாசிம் 43 ரன்களும், ஹாபீஸ் 27 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்தது. சர்ப்ரஸ்கான் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார். வங்கதேச அணி தரப்பில் முஸ்தாபிசூர் 5 விக்கெட்டுகளும், சர்ப்புதிகன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி வங்கதேச அணியில் தமிம் இக்பால் 8 ரன்களிலும், சவுமியா சர்கார் 22 ரன்களிலும் ஆட்டமிழ்ந்தனர். தொடா்ந்து ரஹீம் 16 ரன்களிலும், தாஸ் 32 ரன்களிலும், மகமதுல்லா 29 ரன்களிலும், அரைசதம் கடந்த சாஹிப் அல் ஹாசன் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிகட்டத்தில் மெஹந்தி ஹாசன் 16 ரன்களும், கேப்டன் மோர்தசா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 44.1 ஓவர்களில் வங்கதேச அணி 288 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply