TV

6807407510_87e96e8176_b

புதுச்சேரி, 06.07.19:

திருமணமாகி 6 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பம், பாரதி நகரைச் சோ்ந்தவா் புருஷோத்தமன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்னா் திருநெல்வேலியைச் சோ்ந்த சண்முகசுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த வாரம் சண்முகசுந்தரி தனது பெற்றோரை பார்ப்பதற்காக திருநெல்வேலி சென்றுள்ளார்.

இதனால் வீட்டில் தனியாக இருந்த புரஷோத்தமன், நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் சாப்பிடுவதற்காக பரோட்டா வங்கி வந்துள்ளார்.தொடாந்து பரோட்டாவை சாப்பிட தொடங்கிய புரஷோத்தமன், சாப்பிட்டுக்கொண்டே மனைவியுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.  அப்போது திடீரென புருஷோத்தமன் தொண்டையில் பரோட்ட சிக்கியதால்,மேற்கொண்டு அவரால் பேச முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் புருஷோத்தமன் பேசாததால் தொலைபேசி அழைப்பை துண்டித்த சண்முகசுந்தரி, மீண்டும் கணவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், கணவர் போனை எடுக்காததால் அதிர்ச்சியடைந்த உறவினா்களுக்கு போன் செய்து இந்த சம்பவம் குறித்து எடுத்துக் கூறியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக வீட்டிற்கு வந்த உறவினர்கள் சாப்பிட்ட நிலையில் மயங்கி கிடந்த புருஷோத்தமனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் புருஷோத்தமன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். திருமணமாகி 6 மாதங்களே ஆன புதுமாப்பிள்ளை தொண்டையில் பரோட்டா சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply