TV

6807407510_87e96e8176_b

லண்டன், 06.07.19:

உலககோப்பை கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 7 வி்க்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மேத்யூஸ் 113 ரன்களும், திருமனே 53 ரன்களும், டிசில்வா29 ரன்களும், பெர்ணான்டோ 20 ரன்களும், குசால் பெராரே 18 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், புவுனேஷ்வர், ஜடேஜா, பாண்டியா, குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

தொடா்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் – ராகுல் ஜோடி சிறப்பான குவக்கம் தந்தனர். இவர்கள் இருவரும் நிதானமாகவும் அதே சமயத்தில் அதிரடியாகவும் ஆடி ரன்கள் சேர்ததனர். 30.1 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்தபோது சதமடித்திருந்த ரோகித் சர்மா 103 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடாந்து களமிறங்கிய கேப்டன் கோலி நிதானமாக ஆடி மறுமுனையில் ராகுல் தனது பொறுப்பான ஆட்டத்தால் சதமடித்து அசத்தினார்.

அணியின் ஸ்கோர் 244 ரன்களாக உயர்ந்தபோது ராகுல் 111 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடா்ந்து களமிறங்கிய ஹார்திக் பாண்டியா 7 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply