TV

6807407510_87e96e8176_b

லண்டன், 06.07.19:

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

,உலககோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று ரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தென் ஆ்ப்ரிக்க அணிகளும் மொதுகின்றன.

இதில் முதலில் நடைபெறும் இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வெ்னற இலங்கை அிண முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதன்படி முதலில் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கருனரத்னே 10 ரன்களிலும், குசால் பெராரே  18 ரன்களிலும், ஆட்டமிழந்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய பெர்னாண்டோ 20 ரன்களிலும், மெண்டீஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்து அதிா்ச்சியளித்தனர்.

இலங்கை அணி 55 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில், 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மேத்யூஸ், திருமனே ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். 5 வது விக்டெ்டுக்கு 124 ரன்கள் சேர்த்த நிலையில், அரைசதமடித்த திருமனே 53 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடாந:து நிதான ஆட்டத்தை வெிளப்படுத்திய மேத்யூஸ் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. டிசில்வா 29 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர், பாண்டியா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி சற்று முன்வரை 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் 29 ரன்களிலும், ராகுல் 22 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply