TV

6807407510_87e96e8176_b

தூத்துக்குடி, 06.07.19:

பெற்ற தாயின்  கல்லறையை தோண்டி பிணத்தை வெளியே எடுத்து வீச  நினைத்த  தூத்துக்குடி துறைமுகத்தை எதிர்த்து  கல்லறை முன்பு  மௌன போராட்டம் நடத்திய தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு துறை அலுவலர்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டது பெரும் அதிாச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத்துறை அலுவலராக பணியாற்றுபவர் ஜிஎம் பாட்ஷா. இவரது தாயார் முகமது பீபி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், கடந்த வாரம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி துறைமுக குடியிருப்பு வளாகத்தில் வைத்து உயிரிழந்தார். இதனைத்தொடாந்து அவரை துறைமுக வளாகத்தில் உள்ள மயான பகுதியில் அவரது மகன் பாஷா உடல் அடக்கம் செய்தார்.

இந்நிலையில் அடக்கம் செய்யப்பட்ட உடலை அப்பகுதியில் உள்ள நாய்கள் தோண்ட முற்பட்டதாக  தகவல் கிடைத்ததால், கல்லறையைச் சுற்றிலும் வேலி அடைத்து பாதுகாத்து உள்ளார் பாஷா. இதனை அறிந்த  துறைமுக நிர்வாகம் வேலி அனைத்தையும் இயந்திரங்கள் மூலம்  அகற்றியுள்ளது.  மேலும் இப்பகுதியில் உடலை அடக்கம் செய்யக்கூடாது எனவும் உடலை வெளியே எடுக்கப் போவதாகவும், துறைமுக நிர்வாகம் தெரிவித்ததால்,  மனமுடைந்த அவரது மகன் பாட்ஷா, தனது தாயாரின் உடல் புதைக்கப்பட்ட இ்டத்தில் தனது சீருடையுடன் வந்து அழுதுகொண்டே மௌன விரதம் இருந்துள்ளார்.

மேலும் முஸ்லிம் மத கோட்பாட்டின்படி அறுவை சிகிச்சை செய்து உடலில் காயங்கள் ஏற்படுதல் எதுவும் கூடாது ஆனால் அதையும் மீறி தனது தாயாரின் இரு கண்களை தானமாக வழங்கி இஸ்லாமிய ஜமாத் கமிட்டியை பகைத்துக்கொண்டார். இந்நிலையில் துறைமுக நிர்வாகம் உடலை தோன்றப் போவதாக அறிவித்ததால் அவரது மகன் பாட்ஷா  இவ்வாறான  அமைதி வழிப் போராட்டத்தை  தொடங்கினார்.

இதனிடையே  துறைமுக நிர்வாகம் ஆனது சில அரசியல் கட்சியினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, உடலை தோண்ட போவதில்லை  அதே இடத்தில்  உடல் இருக்கட்டும் என காவல்துறை மூலம் கூறியதின் பேரில்  நேற்று தனது போராட்டத்தை கைவிட்டு பாட்ஷா வீட்டுக்குச் சென்றார்  இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் துறைமுக நிர்வாகம் பாஷா வீட்டிற்கு ஒரு ஆணையை அனுப்பி உள்ளது. அதில்  உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்படுவதாகவும், அவரது அடையாள அட்டை  மற்றும்  பணியில் இருப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் திரும்ப ஒப்படைக்க கோரியும், துறைமுக வளாகத்தில் குடியிருப்பில் உள்ள வீட்டை உடனே காலி செய்ய வேண்டும் எனவும்  வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லக்கூடாது,  அப்படி வெளியே எங்காவது செல்லவேண்டுமானால் அதை துறைமுக நிர்வாகத்திடம் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும் எனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

தாயின் கல்லறை  இடிக்க வேண்டாம் என  அமைதியான முறையில் போராடிய இவர்  மீது  இவ்வாறான நடவடிக்கை எடுத்திருப்பது பெரும்  பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply