TV

6807407510_87e96e8176_b

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பது யார் என இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைய உள்ளன.

மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில்  ஆஸ்திரேலியா,  இந்தியா,  இங்கிலாந்து மற்றும்நியூசிலாந்து அணிகள் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தன. நியூசிலாந்து  11 புள்ளிகளுடன் 4வது இடம் பிடித்த நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதிய பாகிஸ்தான் அணியும் 11 புள்ளிகள் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் அணிரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணியை விட மிகவும் பின்தங்கியிருந்ததால்  அரையிறுதி வாய்ப்பு கனவாகிபோனது.

இந்நிலையில் 6 அணிகள் தங்களது லீக் சுற்றை முடித்துவிட்ட நிலையில்,  இந்தியா,  இலங்கை, ஆஸ்திரேலிய தென் ஆப்ரிக்கா ஆகிய நான்கு அணிகள் தங்களது கடைசி லீக் போட்டியில் இன்று விளையாடுகின்றன. இதில் இந்திய அணி இலங்கையுடனும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்கா அணியுடனும் மோதவுள்ளன.  இந்த போட்டிகளின் முடிவைப் பொறுத்தே  புள்ளிப்பட்டியலில் முதலாவது மற்றும் 2வது இடம் யாருக்கு என்பது தெரியும். அதன் அடிப்படையிலேயே அரை இறுதி அட்டவணையும் திர்மானிக்கப்படும்.

இலங்கையை வீழ்த்தி இந்தியா 15 புள்ளிகள் பெற்றாலும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா தோற்றால் மட்டுமே இந்திய அணி முதலிடத்தை பிடிக்க முடியும். இதன் அடிப்படையில் இந்திய அணி தனது அரை இறுதியில் இங்கிலாந்தை சந்திக்குமா அல்லது நியூசிலாந்தை எதிர்கொள்ளுமா என்பது முடிவாகும். அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்ட இலங்கை, தென் ஆப்ரிக்க அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற வரிந்துகட்டுகின்றன.  எனவே, இன்று நடைபெற உள்ள இரண்டு லீக் ஆட்டங்களுமே ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாகத் தூண்டியுள்ளன.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply