TV

6807407510_87e96e8176_b

கோவை, 08.07.19:

சர்வதேச தடகள சங்கம் மற்றும் கஜகிஸ்தான் தடகள சங்கம் இணைந்து நடத்திய 29 வது கஜகிஸ்தான் சர்வதேச தடகள போட்டி, அதன் தலைநகரான ஆல்மைட்டி பகுதியில், கடந்த 3 தினங்களுக்கு துவங்கியது. மொத்தம் 65 நாடுகள் பங்குகொண்ட இப்போட்டியில் 1500 க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கு கொண்டனர்.

இப்போட்டியில், இந்தியா சார்பில் பங்கு கொண்ட  முகம்மது சலாவுதீன், மும்முறை தாண்டும் போட்டியில் 16.64 மீ தாண்டி தங்க பதக்கத்தினை தட்டி சென்றார். இந்தியா சார்பில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. வெற்றி பெற்ற வீரர் முகம்மது சலாவுதீன் கோவை சுங்க இலாகாவில் அதிகாரியாக பணிபுரிகிறார்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply