TV

6807407510_87e96e8176_b

விருதுநகர், 08.07.19:

விருதுநகர் மாவட்டம் வதுவார்பட்டியை சேர்ந்த பால்பாண்டியன்  மகன் வடிவேல்முருகன்(40). தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வள மையத்தில் சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு  விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி ஆர்.சி.தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கிரேஸி(29) என்பவருடன்  திருமணம் முடிந்து, இவர்களுக்கு ரோஸி ஏஞ்சல் (4) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே அருப்புக்கோட்டை அருகே சொக்கலிங்கம்புரத்தை சேர்ந்த பிரியா (28) என்ற பெண்ணை வடிவேல்முருகன் 2-வது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேல்முருகன் இன்று வழக்கம் போல் வேலையில் இருந்தார்.

அப்போது மாலையில் அவரை தேடி கிரேஸியின் தம்பி அற்புத செல்வம் என்ற ஆஸ்டின்(27) வந்தார். இருவரும் பள்ளி வளாகத்துக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அற்புத செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வடிவேல் முருகனை சராமரியாக குத்தினார். இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்றவர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனரே தவிர, யாரும் காப்பாற்ற முன் வரவில்லை.

இந்நிலையில் கத்திக்குத்துப்பட்டு படுகாயமடைந்த வடிவேல்முருகன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த புதூர் காவல் நிலைய ஆய்வாளர் வடிவேல் முருகன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply