TV

6807407510_87e96e8176_b

மான்செஸ்டர், 09.07.19:

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்தியா அணியும், நான்காம் இடத்தில் உள்ள் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது.

கடந்த மே 30ம் தேதி தொடங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின்  லீக் சுற்று முடிவடைந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் நாக் அவுட் சுற்றுக்ககு தகுதி பெற்றன. இந்நிலையில் பரபரப்பான நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்கும் நிலையில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில், முதலாவது இடம் பிடித்த இந்திய அணியுடன் 4வது இடம் பிடித்த நியூசிலாந்து மோதுகிறது.

ஏற்கனவே உலககோப்பை தொடர் தொடங்கும் முன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றிருந்தாலும், 8 லீக் ஆட்டத்தில் 7 வெற்றியை வசப்படுத்தியதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் களமிறங்குகின்றனர். மேலும் லீக் சுற்றில் மோதவிருந்த இந்தியா நியூசிலாந்து ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுது்தவரை  தொடக்க வீரர்கள் ரோகித், ராகுல் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  கோஹ்லி மற்றும் நடுவரிசை பேட்ஸ்மேன்களும் எத்தகைய சவாலுக்கும் தயாராகவே உள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே டோனி, கேதாரின் நிதான அணுகுமுறை விமர்சனத்துக்குள்ளானது. பேட்டிங் வரிசையில் அதிக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பந்துவீச்சு கூட்டணியை இறுதி செய்வது சற்று கடினமாகவே இருக்கும். பூம்ரா, ஷமி, புவனேஷ்வர் என மூன்று வேகங்களுடன் களமிறங்கினால், தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக கேதார் இடம் பெறும் வாய்ப்பு உள்ளது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியையும் தொடக்கத்தில் வெற்றிகளைக் குவித்த வந்த நிலையில், பின்னர் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்ததால் தட்டுத் தடுமாறியே அரை இறுதிக்குள் நுழைந்துள்ளது. எனினும், விக்கெட் வேட்டை நடத்தி வரும் நியூசி. வேகங்கள் பெர்குசன் (17), போல்ட் (15), ஹென்றி (10), நீஷம் (11), கிராண்ட் ஹோம் (5) பந்துவீச்சை சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். இறுதிப் போட்டிக்குள் நுழைய இரு அணிகளுமே முனைப்புடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறகும் என்பதில் சந்தேகமில்லை.

மான்செஸ்டரில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கை சொல்கிறது. வானம் மேக மூட்டமாக இருக்கும். காற்று அதிகபட்சமாக 18 கி.மீ. வேகத்தில் வீசும். போட்டி நடைபெற உள்ள ஓல்டு டிரபோர்டு அரங்கில் ஆடுகளங்கள் நேற்று முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டிருந்தன. நேற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணபட்டது. மழையால் போட்டி பாதிக்கப்பட்டால் விதிகளின் படி நாளை நடைபெறும். நாளையும் இதே நிலைமை தொடர்ந்தால் லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணி வென்றதாக அறிவிக்கப்படும்.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply