TV

6807407510_87e96e8176_b

பெரம்பலூர், 10.07.19:

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக நண்பரின் திருமணத்தில் வாளியில் தண்ணீரை பரிசளித்து, புதிய நண்பர்கள் அமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் கடந்த ஒரு மாதகாலமாக தமிழகமே தண்ணீருக்காக அல்லல்பட்டு கொண்டிருக்கிறது . இந்நிலையில் தண்ணீர் உயிர் நீர் என்பதை வலியுறுத்தும் வண்ணம், புதிய நண்பர்கள் அமைப்பு சார்பாக தனது நண்பனின் திருமணத்திற்கு வாளியில் தண்ணீரை பரிசளித்து தம்பதிகளை வாழ்த்த வந்திருந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகவன் சிவராமன் தெரிவித்தார்.

மேலும் தங்கத்தை விட தண்ணீர் மேலானது என்பதை வலியுறுத்தும் வண்ணம் புதுமணத்தம்பதிகளான நல்லப்பன் இந்துமதி தம்பதிகளுக்கு தண்ணீர் வாளிகள் வழங்கியதாக தெரிவித்தார். தண்ணீர் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவானது,
தண்ணீர் விற்பனைக்கான பொருள் அல்ல எனவும், தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நீர்நிலைகளையும் நீர்வழித்தடங்களையும் சீரமைக்க வேண்டியது தற்காலத் தேவை என்பதை திருமணத்திற்கு வந்திருந்தவர்களிடம் உணர்த்த முடிந்ததாக தெரிவித்தார்.

அதே போல திருமண விழாவிற்கு வருகை புரிந்த உறவுகளுக்கு நெகிழிப் பைகளைத் தவிர்த்து துணிப்பைகளை கையிலெடுக்க அறிவுறுத்தும் விதமாக துணிப்பைகளையும், விதைகளை பரப்பும் நோக்கில் மரபு காய்கறி விதைகளைக் கொண்ட பொட்டலங்களையும் மணமக்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.



Type Comments in Indian languages (Press Ctrl+g to toggle between English and Tamil OR just Click on the letter)

Leave a Reply